கோயம்புத்தூர் மாநகரின் நீட்சியான சூலூர் நகரம், தேசிய நெடுஞ்சாலை எண் 67 இல் அமைந்துள்ளது.நொய்யலாற்றங்கரையிலமைந்துள்ள இந்நகரில் எந்நேரமும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கும் அழகான படகுத்துறை உண்டு.கரையை ஒட்டி முன்பு சூரல் எனப்படும் பிரம்பு அடர்ந்து வளர்ந்திருந்ததால்தான் சூரலூர் என்றிருந்து காலப்போக்கில் மருவி சூலூர் என்றானது.!

கேரள மாநிலத்தையும், கோயம்புத்தூரையும் இந்தியாவின் பிறபகுதிகளுடன் இணைக்கும் பெரும்பாலான ரெயில் வண்டிகளும் சூலூரைத்தான் கடந்து செல்கின்றன. இவ்வூரில் விமானப் படைத்தளமும் அமைந்துள்ளது. எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் சுற்றிலும் அமைந்துள்ள சூலூர் நகரானது பலதரப்பு மக்களும் வசிக்கும் இடமாகும்